search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணத் தகராறு"

    கோபி அருகே பணத் தகராறில் விவசாயி தாக்கியதால் டிராக்டர் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கோபி:

    கோபி அடுத்த லா.தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 39) டிராக்டர் டிரைவர். போடி சின்னம் பாளையத்தை சேர்ந்த விவசாயி சுந்தரம் என்பவரிடம் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்தார்.

    கடந்த 9-ந் தேதி தனது டிராக்டரை ஓட்டி வந்த சிவகுமாரிடம் டிராக்டர் ஓட்டிய வகையில் பாக்கி பணம் ரூ.4 லட்சம் தர வேண்டும் எப்போது தருவாய்? என சுந்தரம் கேட்டாராம். இது தொடர்பாக அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு முத்தியது. இதில் ஆத்திரம் அடைந்த சுந்தரம் சிவக்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் டிராக்டர் டிரைவர் சிவக்குமார் மனம் உடைந்த நிலையில் இருந்தார். கடந்த 11-ந் தேதி அவர் திடீரென வி‌ஷம் குடித்தார். அவரை சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக சிவகுமார் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சிவகுமார் பரிதாபமாக இறந்து விட்டார்.

    இது குறித்து கோபி போலீசார் சுந்தரம் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தர்மபுரி அருகே வீடு கட்டுவதற்கு பணம் தேவைப்பட்ட தகராறில் எலக்ட்ரீசியன் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    தர்மபுரி:

    தர்மபுரி அருகே உள்ள அன்னசாகரத்தை அடுத்த கிழவன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சிவா (25). எலக்ட்ரீசியனான இவர் அதியமான்கோட்டை அருகே உள்ள ஜாலி கொட்டாய் பகுதியைச் சேர்ந்த மாது என்பவரின் மகள் நந்தினியை கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

    இந்த நிலையில் சிவா சொந்தமாக வீடு கட்டி வருகிறார். இதற்காக தனது மனைவி நந்தினியிடம் அவரது தாயார் வீட்டில் நகை, பணம் வாங்கி வருமாறு கேட்டார். இதற்காக அவர்களும், 5 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை கொடுத்து உதவினர்.

    இதைத்தொடர்ந்து சிவா மீண்டும் தனது மனைவியிடம் அவரது வீட்டில் இருந்து பணம் வாங்கி வருமாறு கேட்டார். 
    இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த நந்தினி வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு கொண்டார்.

    உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு  சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 வருடங்கள் ஆன நிலையில் நந்தினி தற்கொலை செய்து கொண்டதால் அவரது உறவினர்களிடம் உதவி கலெக்டர் சிவன்அருள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஏம்பலம் அருகே சாராயத்தில் எலி மருந்து கலந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    ஏம்பலம் அருகே மேல் சாத்தமங்கலம் தேனீபன் நகரை சேர்ந்தவர் எத்திராஜ் (வயது 42). விவசாயி. இவர் ஏற்கனவே குடும்ப செலவுக்கு பணம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த கடனை திருப்பி கொடுக்காத எத்திராஜ் தனது மனைவி வள்ளிக்கு தெரியாமல் மேலும் சிலரிடம் பணம் கடன் வாங்கினார். 

    இதனை அறிந்த வள்ளி சம்பவத்தன்று கணவரை கண்டித்தார். இதனால் மனமுடைந்த எத்திராஜ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். சம்பவத்தன்று எலி மருந்தை வாங்கி கொண்டு அருகில் உள்ள சாராயக்கடைக்கு சென்றார். அங்கு சாராயத்தில் எலி மருந்தை கலந்து குடித்தார். 

    இதில் சாராயக்கடையிலேயே எத்திராஜ் மயங்கி விழுந்தார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் எத்திராஜை மீட்டு கரிக்க லாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். 

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை எத்திராஜ் பரிதாபமாக இறந்து போனார். 

    இது குறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    திருச்சி அருகே இன்று மனைவியின் கழுத்தை அறுத்து கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி மாவட்டம் வடக்குஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசந்தர் (வயது 40). இவரது மனைவி மகாலட்சுமி (36) . இவர்களுக்கு 2மகன்கள் உள்ளனர். பாலசந்தர் சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார்.

    சிங்கப்பூரில் பணியாற்றி வந்த போது, பாலசந்தர் அவரது மனைவிக்கு பணம் அனுப்பியுள்ளார். ஊருக்கு திரும்பியதும் அந்த பணத்தை எங்கே என்று மனைவியிடம் கேட்டுள்ளார். அவர் 2 மகன்களின் கல்விக்கு செலவு செய்து விட்டதாக கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்றிரவும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலசந்தர், இன்று அதிகாலை தூங்கி கொண்டிருந்த மகாலட்சுமியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார். பின்னர் மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையம் சென்று சரணடைந்தார்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மகாலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மகாலட்சுமியின் நடத்தையில் பாலசந்தர் சந்தேகப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினையில் கொலை செய்தாரா? என்றும் பாலசந்தரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தர்மபுரியில் வாலிபர் குத்திக்கொல்லப்பட்ட சம்பவத்தில், ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி வட்டார வளர்ச்சி காலனியை சேர்ந்தவர் சேகர் மகன் பிரதீப் (வயது 24). டிப்ளமோ படித்துள்ளார். சம்பவத்தன்று இரவு பிரதீப் தனது நண்பரான ஆட்டோ டிரைவர் ரமேஷ்குமார் மற்றும் சிலருடன் பென்னாகரம் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே பேசிக்கொண்டிருந்தார். பிரதீப்பிற்கும், அவருடைய நண்பர்களுக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பிரதீப் கத்தியால் குத்தப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் இறந்தார். 

    இது குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் பிரதீப் கொலை தொடர்பாக ஆட்டோ டிரைவர் ரமேஷ்குமார், பிரபாகரன் (25), உதயகுமார் (24) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    கீரனூர் அருகே தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான 5 பேரிடம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வீராச்சாமி (வயது 70). தொழில் அதிபர். இவரது மகன் முத்து (30). வீராச்சாமிக்கு சொந்தமாக விராலிமலையில் பெட்ரோல் பங்க் உள்ளது. 

    இந்த நிலையில் களமாவூர் சத்திரத்தை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவருமான மூர்த்தி (52), என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வீராச்சாமியிடம் இருந்து ரூ.1 கோடியே 25 லட்சம் கடனாக வாங்கி உள்ளார். ஆனால் பணத்தை திரும்ப கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. 

    இதுதொடர்பாக 2 தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று வீராச்சாமி மற்றும் அவரது மகன் முத்து ஆகியோரை, மூர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர் வெட்டிக்கொன்றனர்.

    இந்த கொலை சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர், மூர்த்தி உள்ளிட்ட 15 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். 

    இந்த நிலையில் இந்த கொலையில் தொடர்புடைய வினோத், சிக்கல்குமார், செல்வகுமார் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான மூர்த்தி உள்ளிட்டோரை பிடிக்க தனிப்படையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    கள்ளக்குறிச்சி அருகே பணத் தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள சிறுமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன்(33). தொழிலாளி. இவரது சகோதரிகள் ஜெயலட்சுமி, சின்னம்மாள். இவர்கள் 3 பேரும் கேரளாவில் கூலி வேலை செய்து வந்தனர். 

    அப்போது அய்யப்பன் அவரது தங்கை ஜெயலட்சுமிக்கு ரூ.28 ஆயிரத்தை கடனாக கொடுத்தார். 

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அய்யப்பனும் அவரது சகோதரிகளும் அவர்களது சொந்த ஊரான சிறுமங்கலத்திற்கு வந்தனர். அதன் பின்னர் அய்யப்பன் கடனாக கொடுத்த ரூ.28 ஆயிரத்தை அவரது சகோதரி ஜெயலட்சுமியிடம் கேட்டார். அதற்கு அவர் தற்போது தன்னிடம் பணம் இல்லை என கூறினார். இதில் ஜெயலட்சுமிக்கும் அய்யப்பனுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

    சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அய்யப்பனை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை ஜெயலட்சுமி அவரது அக்கா மகன் பாலகிருஷ்ணன்(19) என்பவரிடம் கூறினார்.

    இதை தொடர்ந்து பாலகிருஷ்ணன், அய்யப்பனிடம் சென்று எதற்காக ஜெயலட்சுமியிடம் பணம் கேட்டு தகராறு செய்கிறாய் என்று கேட்டார். இதில் அவர்கள் 2 பேருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அய்யப்பனின் வயிற்றில் குத்தினர். 

    இதில் பலத்த காயம் அடைந்த அய்யப்பன் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். உடனே பாலகிருஷ்ணன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். காயம் அடைந்த அய்யப்பனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

    இது குறித்து வரஞ்சரம் போலீசில் அய்யப்பன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.
    தேன்கனிக்கோட்டையில் பணத் தகராறில் கூலி தொழிலாளியை கீழே தள்ளி விட்டதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியை அடுத்த குடக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 60). கூலித் தொழிலாளி. இவரது மகன் மாரியப்பன் (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிவருத்ரா என்பவரிடம் கடனாக பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாரியப்பனிடம் சென்று பணத்தை கேட்பதற்காக சிவருத்ரா அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு மாரியப்பன் தந்தை ராமகிருஷ்ணனிடம் கேட்டார். அப்போது தனது மகன் வீட்டில் இல்லை என்றும், வெளியே சென்றுள்ளார் என்று கூறியுள்ளார். பணத்தை வாங்கி கொண்டு பணத்தை தராமல் இழுத்தடித்து வருவதாக கூறி ராமகிருஷ்ணனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    இதனால் இருவருக்கும் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த சிவருத்ரா ராமகிருஷ்ணனை கீழே தள்ளி விட்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சிவருத்ராவை தப்பி விடாமல் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் அஞ்செட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராமகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ராமகிருஷ்ணனை தாக்கி கீழே தள்ளிவிட்டு கொலை செய்த சிவருத்ராவை அக்கம் பக்கத்தினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    மணிமண்டபத்தை கட்டி முடித்ததற்கு பணம் தராததால் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கட்டிட தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    கடலூர் புதிய கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக அளித்தனர்.

    விருத்தாசலம் அருகே உள்ள புதுப்பேட்டையை சேர்ந்தவர் ராஜாராம். கட்டிட தொழிலாளி. இவர் கலெக்டர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனுவுடன் இன்று வந்தார்.

    கலெக்டர் அலுவலக வளாகத்தில் அவர் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை பாட்டிலை எடுத்து திடீரென்று உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அங்கு விரைந்து வந்து ராஜாராம் வைத்திருந்த மண்எண்ணை பாட்டிலை பறித்தனர். தொடர்ந்து அவர் உடல் மீது தண்ணீரை ஊற்றினர். இது குறித்து ராஜாராமிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-

    கடலூர் மாவட்டம் நான்கோட்டிமுனை என்ற கிராமத்தில் உள்ள ஒருவரின் தாய்க்கு மணிமண்டபம் கட்டும் பணியை என்னிடம் ஒப்படைத்தனர்.

    அதற்கு அவர்கள் முன்பணமாக ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கொடுத்தனர். மீதி பணத்தை நீங்களே போட்டு வேலையை முடியுங்கள். கடைசியில் நாங்கள் அந்த பணத்தை கொடுத்து விடுகிறோம் என்றனர். அவர்கள் சொன்னபடி நான் பலரிடம் கடன் வாங்கி அந்த மணிமண்டபத்தை கட்டி முடித்து கொடுத்தேன். ஆனால், அவர்கள் இது வரை எனக்கு தரவேண்டிய மீதி பணத்தை கொடுக்கவில்லை.

    இது குறித்து போலீசில் புகார் செய்தும் எந்தவித பயனும் இல்லை. மேலும் விருத்தாசலம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளேன். அதுவும் நிலுவையில் உள்ளது.

    இந்த சம்பவத்தால் மிகுந்த மனம் உடைந்த நான் கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றேன்.

    இவ்வாறு அவர் போலீ சாரிடம் கூறினார்.

    பின்னர் அவரை சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கீழ்வேளூர் அருகே பணத் தகராறில் வீடு புகுந்து பெண்ணை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    கீழ்வேளூர்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த வலிவலம் சிவன் கீழவீதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 31). இவர் வேதாரண்யம் கோர்ட்டில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மாலதி (26). இவரது வீட்டுக்கு கடந்த 19-ந் தேதி இரவு 11 மணியளவில் 6 பேர் கொண்ட ஒரு கும்பல் வந்து கணவன்-மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தாக்கியவர்களை பிடிக்க முயற்சித்தனர். அப்போது 2 பேர் மட்டும் பிடிப்பட்டுள்ளனர். மற்ற 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

    இதையடுத்து பிடிப்பட்ட 2 வாலிபர்களையும் வலிவலம் போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அசோக்குமாரின் மனைவி மாலதிக்கு பேஸ்புக் மூலம் கோவையை சேர்ந்த அமுதன் என்ற டாக்டருடன் தொடர்பு இருந்ததாகவும், அதன் முலம் மாலதி பல்வேறு காரணங்களை கூறி  சிறுக சிறுக ரூ.30 லட்சம் வாங்கி ஏமாற்றி விட்டதாகவும், பிடிப்பட்ட வாலிபர்கள் தெரிவித்தனர். ஆனால் தனது மனைவி 8-ம் வகுப்பு மட்டும் படித்துள்ளதாகவும் முகநூல் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது என்று அசோக்குமார் போலீசாரிடம் கூறியுள்ளார். 

    இதையடுத்து வலிவலம் போலீஸ் சப். இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கைதானவர்கள் திருவாருர் கம்பர் தெருவை சேர்ந்த முத்து (22), திருவாரூர் முதலியார் தெருவை சேர்ந்த அஜய் (24) என்று தெரியவந்தது. மேலும் தாக்குதலில் ஈடுபட்டு தப்பி சென்றுவிட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    சீட்டு பணத் தகராறில் ஆசிரியரை காரில் கடத்தி சென்ற கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள பாப்பாங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 52). விவசாய ஆசிரியராக பணி புரிந்தவர். இவரது மனைவி பெயர் சுமதி (46). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. மகன் 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    பழனிசாமி சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதையொட்டி இவருக்கும், சிலருக்கும் பணத் தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை ஈரோட்டை சேர்ந்த கார் டிரைவர் சிலம்பரசன், மேலும் 2 பேர் காரில் வந்தனர். சிலம்பரசனின் மாமியார் பெயர் கிருஷ்ணகுமாரி.

    கிருஷ்ணகுமாரிக்கும், ஆசிரியர் பழனிசாமிக்கும் இடையே சீட்டு போட்டதில் பணம் கொடுக்கல்- வாங்கலில் பிரச்சினை உள்ளது. இதையொட்டி பழனிசாமி வீட்டுக்கு வந்த சிலம்பரசனும் அவருடன் வந்தவர்களும் பழனிசாமியிடம் 90 ஆயிரம் பணத்தை எப்போது கொடுப்பாய்...? கேட்டு தகராறு செய்த அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

    பிறகு அவரை வலுகட்டாயமாக கடத்தினர். இதை தடுத்த அவரது மனைவி சுமதியை தள்ளி விட்டு விட்டு பழனிசாமியை காரில் தூக்கிபோட்டு கடத்தி சென்று விட்டனர்.

    தனது கண் எதிரேயே கணவர் கடத்தப்பட்டதை கண்டு திடுக்கிட்ட அவர் அதிர்ச்சியில் உறைந்தார்.

    இது குறித்து கவுந்தப்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி பழனிசாமியை காரில் கடத்தி சென்ற கும்பலை தேடி வருகிறார்கள். 

    பணத் தகராறில் கட்டிட தொழிலாளர்கள் மோதிக் கொண்டதில் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    நாசரேத்:

    நாசரேத் அருகே உள்ள மணிநகர் ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 49) கட்டிட தொழிலாளி. இவருடன் மேல வெள்ளமடத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் வேலை பார்த்தார். இந்த நிலையில் ஜெயராஜ், நடராஜனுக்கு ரூ.4 ஆயிரம் கடன் கொடுத்தாராம். அதனை திருப்பி கொடுக்காததால் ஜெயராஜ் தனது மருமகன் இசக்கி முத்து என்பவருடன் சென்று பணத்தை கேட்டுள்ளார். 

    அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஜெயராஜ், இசக்கிமுத்து இருவரும் கம்பியால் தாக்கப்பட்டனர். இதுகுறித்து நாசரேத் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் நடராஜன் மீது வழக்குபதிவு செய்தார். 

    இதேபோல் நடராஜன் கொடுத்த புகாரில் ஜெயராஜிடம் வாங்கிய பணத்தை 2 மாதத்தில் தருவதாக கூறியிருந்தேன் அதனை அவர் கேட்காமல் என்னை தாக்கியுள்ளார். இதுதொடர்பாக ஜெயராஜ், இசக்கிமுத்து ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
    ×